சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் 138 ருபாவினால் குறைப்பு
காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்
காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையில் அமுலில் உள்ள விலைக்கு அமைவாக உள்ளுர் சந்தையிலும் காசின் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது. இதற்கு அமைவாகவே காசின் விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்.