fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுமி கொலை-கதறியழுத தாய்மார்கள்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 21:17

சிறுமி கொலை-கதறியழுத தாய்மார்கள்.

யாழ் சுழிபுரம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து யாழ் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சுழிபுறம் காட்டுப்புலம் பகுதியில் வசித்து வந்த சி.ரெஜினா எனும் மாணவியின் சடலம் கடந்த 25 ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்;டத்தில் ஈடுபட்டுள்ளனர். காட்டுப்புலம் பகுதி மக்களும் குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலை மாணவர்களும், காரைநகர் சுழிபுறம் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாணவியின் கொலைக்கு தகுந்த நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி;க்கை விடுத்தனர்.

இவ்விடத்திற்கு வருகை தந்த மக்கள் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இப்படி இனி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என தலையடித்து கதறியதையும் காணக்கூடியதாக இருந்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 21:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க