இவ்வருடத்திற்கான உலக சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 67 ஆவது இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டிற்குரிய பட்டியலில் இருந்ததை விடவும் ஐந்து இடங்கள் இலங்கை முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொருளாதாரத்திற்கும், சமாதானத்திற்குமான நிறுவனம் என்ற அமைப்பு உலகில் உள்ள 163 நாடுகள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து சமாதான சுட்டென் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இம்முறை தெற்காசிய பிராந்திய நாடுகள் மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது சிறப்பம்சமாகும். சமாதானப் பட்டியலின் அடிப்படையில் பிராந்தியத்தில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் இலங்கையை விட கீழான நிலையில் காணப்படுகிறது.