அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ரஷ்ய ஜனாதிபதிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.