யாழ்ப்பாணம் மாணிப்பாய் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வருகைத்தந்த 9 பேர் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலையானவரென மாணிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீண்டகாலமாக குறித்த இரு குழுக்களுக்குமிடையில் மோதல் நீடித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.