20-20 போட்டியையும் இழந்தது அவுஸ்திரேலியா
Related Articles
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற டுவண்டி – 20 போட்டியில் 28 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றது. ஜோஸ் பட்லர் 61 ஓட்டங்களையும், எலக்ஸ் ஹெல்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்வெப்சன் 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் 222 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணி தலைவர் ஆரோன் பின்ச் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் க்ரிஸ் ஜோர்டன் மற்றும் அதில் ரஷீட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக அதில் ரஷீட் தெரிவானார். இதேவேளை இரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 5 – 0 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், ஒரு போட்டியாக அமைந்த டுவண்டி – 20 ஐயும் இங்கிலாந்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.