fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேங்கி கிடந்த தபால்களை விநியோகிக்க இன்று முதல் விசேட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 12:13

தேங்கி கிடந்த தபால்களை விநியோகிக்க இன்று முதல் விசேட நடவடிக்கை

பணிபகிஷ்கரிப்பு காரணமாக தேங்கி கிடந்த தபால்களை விநியோகிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த விசேட நடவடிக்கையின் மூலம் தபால்கள் மற்றும் பொதிகள் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் ஊழியர் சங்கத்தின் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்திருக்கும் தபால்களையும் பொதிகளையும் விநியோகிக்கவும் விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தபால் ஊழியர்கள் கடந்த 14 நாட்களாக முன்னெடுத்த பணிபகிஷ்கரிப்பு நேற்றைய தினம் கைவிடப்பட்டது. எனினும் தற்காலிகமாகவே தமது வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தபால் தொழிற்ச்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2018 12:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க