2018-06-26ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. களுத்துறை பொலிஸ் கல்லூரியில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக நவீன வசதிகளுடன் கூடிய நான்கு மாடிக்கட்டடத்தை நிர்மாணித்தல். (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)
சுமார் 209 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள களுத்துறை பொலிஸ் கல்லூரியின் மூலம் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பதவி வரையிலான பொலிஸ் அதிகாரிகள் 1000 இற்கும் மேற்பட்டோரை பயிற்றுவிப்பதற்காக தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகற்கை நெறிகள் மத்திய நிலையத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் குறைந்த வசதிகளுடனான கட்டடத்திற்கு பதிலாக நவீன வசதிகளைக்கொண்ட 4 மாடிக்கட்டம் ஒன்று நிர்மாணிப்பதன் மூலம் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்க நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. தேசிய மதிப்பீட்டுக் கொள்கை ( நிகழ்ச்சி நிரலில் 27 ஆவது விடயம்)
ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தினால் நாடு முழுவதும் 1300 பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் சுமார் மூன்றிலொரு பங்கு அபிவிருத்தி , 500 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட செலவில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய திட்டங்கள் என்பதனை அடையாளம் காண முடியும். இந்த திட்டங்களுக்கு மேலதிகமாக மாகாண, மாவட்ட, பிரதேசம் மற்றும் உள்ளுராட்சி மன்ற மட்டத்திலும் ,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்பாடுகள் பெருமளவில் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் இந்த அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கிட்டும் பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்கு முறையான செயற்பாடுகள் இல்லாததன் காரணமாக இதன் பலன்கள் இந்த திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் அல்லது அவற்றின் மூலமான நீண்டகால பெறுபேறுகளை உரியவகையில் மதிப்பீடு செய்வது சிரமமாக அமைந்துள்ளது. இதற்கமைவாக இந்த நிலைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினரதும் புத்திஜீவிகளின் பங்களிப்புடனான தயாரிக்கப்பட்ட தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக இளைஞர்கள் திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. ரிச்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய – மார்பு சார்ந்த சிகிச்சைக்கான கட்டடத்தொகுதியின் ஆரம்ப நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)
ரிஞ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய – மார்பு சார்ந்த சிகிச்கைக்குட்பட்ட கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் இணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் கூட்டுத்திட்டமாக முன்னெடுத்தல் மற்றும் அதன் நிர்மாணப்பணிகள் இலங்கை கடற்படையை பயன்படுத்தி மேற்கொள்வதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரினால் பரிந்துரைக்கபட்டப ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இலங்கை கடற்படையை பயன்படுத்தி நிர்மாணிக்க முடியாத சில பணிகள் வெளியாரின் மூலம் நிறைவேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக ரிச்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய – மார்பு சார்ந்த சிகிச்சை கட்டட தொகுதி நிர்மாணிக்கும் திட்டத்தின் அடிப்படையை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபார்சிற்கமைய 99.67 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட நவலோக பயிலின் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஹோட்டல் ஒன்றை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 33 ஆவது விடயம் )
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் விமான ஹோட்டல் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனத்திற்குட்பட்ட காணியில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்து அதை முன்னெடுப்பதற்காக பெறுகை அமைச்சு சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபார்சுக்கமைய திலங்கா ஹோட்டல் தனியார் நிறுவனம் மற்றும் ஸ்ரைடர்ஸ் கோப்பிரேசன் குழுமத்திடம் வழங்குவதற்காக பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோகா அபேயசிங்க அவர்களினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5.விமானங்களில் பயணிகளின் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தக்கூடிய வசதிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சஞ்சிகையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை (நிகழ்ச்சி நிரலின் 36ஆவது விடயம்)
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தக்கூடிய வசதிகள் குறித்த துண்டு பிரசுரம் மற்றும் விரிவான தகவல்கள் அடங்கிய சஞ்சிகையை விநியோகிப்பதற்கான பணிக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபார்சுக்கமைவாக 2018.10.01 தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு 5.92 அமெரிக்கடொலர் மில்லியன்களுக்கு வரையறுக்கப்பட்ட இன்பிலைட் டபிளின் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அரசதொழிற்துறை மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6.வந்துறபீனு எல்ல நீர்த்தேக்க திட்டம் ( நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)
குருநாகல் மாவட்டத்திற்கு குடிநீரை விநியோகிப்பதற்கும் தெதுறுஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு அருகாமையில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து நீர் விநியோகத்திட்ட பரிந்துரை முறைக்காக தண்ணீரை முறையாக சேகரித்து வைப்பதற்கு வந்துறுபீனு எல்ல நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பது சிறந்த மாற்று நடவடிக்கையாகும் என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த உத்தேச நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பது தொடர்பில் இந்தியாவின் M.S Tata Projects Ltd. னால் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய சம்பந்தப்பட்ட சாத்தியக்கூற்றை மேற்கொள்வதற்காக M.S Tata Projects Ltd நிறுவனம் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. நைவல என்ற பிரதேசத்தில் 1500 கொள்ளளவு நீரைக்கொண்ட நீர் தாங்கி கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் நீரைச்சேகரித்து வைப்பதற்கும் விநியோகிப்பதற்குமான கட்டமைப்பை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 39ஆவது விடயம்)
கம்பஹா , அத்தனகல்லை, மினுவாங்கொட ஒன்றிணைந்த நீர்த்தேக்க திட்டத்தின்கீழ் நாளாந்தம் 1500 கன மீட்டர் கொள்ளவு நீருடனான நீர் தாங்கிக் கோபுரம் ஒன்றை நைவல என்ற இடத்தில் நிர்மாணித்தல் சேகரித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக தேவையான நீரைப்பெற்றுக்கொள்ளுதல் மற்றும் ஏனைய உபகரணங்களை பொருத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபார்சுக்கமைய வரையறுக்கப்பட்ட சீலேக்ஸ் பொறியியலாளர் தனியார் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பிரத்தீபா இன்டஸ்ரீட்ஸ் நிறுவனத்திற்கிடையில் ஏற்படுத்திற்கொள்ளப்பட்ட மாற்றீடு வர்த்தக நிறுவனத்திடம் வழங்குவதற்காக நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. வடமாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனை சேவையை பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
இலங்கை கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளதுடன் இந்த பிரதேசங்களில் வாழ்வாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய முக்கிய தொழிற்துறையாக கடற்றொழில் தொழிற்துறை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் கடற்றொழில் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் 2 கடற்றொழில் துறைமுகங்களும் ,யாழ்ப்பாணம் மண்டைதீவில் நங்கூரம் இடுவதற்கான வசதிகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 கடற்றொழில் இறங்குதுறைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கடற்றொழில் இறங்குதுறைகளும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3கடற்றொழில் இறங்குதுறைகளையும் மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கமைவாக கடற்றொழில் துறைமுகம் நங்கூரமிடும் இடங்கள் மற்றும் இறங்குதுறைகளை நிர்மாணித்தல் ,அபிவிருத்தி செய்தல் நீர் உயிரின உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கென ஆலோசனை நிறுவனம் ஒன்றை தெரிவுசெய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. எரிபொருள் விலையை காலத்திற்கு ஏற்றவகையில் தயாரிப்பதற்கான குழு (நிகழ்ச்சி நிரலின் 50 ஆவது விடயம்)
எரிபொருள் விலைக்கான செலவினங்களை அடிப்படையாகக்கொண்டு விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் அதனை 2018 மே மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் முன்னதாக 2 மாத காலப்பகுதியில் சர்வதேச விலையை அடிப்படையாகக்கொண்டு மூன்றாம் மாதத்தில் 5ஆம் தினத்திற்கு எரிபொருள் விலைச்சூத்திரத்தை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விலை சூத்திர முறையை சிறப்பாக ஒழுங்குமுறைக்கமைய நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளைக்கொண்ட உத்தியோகபூர்வ குழுவொன்றை அமைப்பதற்கும் இந்த குழுவினால் ஒவ்வொரு 3 மாதத்திலும் வரும் 5ஆம் நாளில் வாகனத்திற்காக பயன்படுத்தப்படும் பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருள் விலையை காலத்திற்கு ஏற்றவகையில் முன்னெடுப்பதற்காக நிதி மற்றும் வெகுஜன ஊடத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச தகவல் திணைக்களம்