fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரிய புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறும்-அமைச்சர் ராஜித

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2018 14:07

பாரிய புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறும்-அமைச்சர் ராஜித

மருத்துவ துறையில் இடம்பெற்று வரும் புரட்சிகரமான மாற்றங்களுடன் முன்னோக்கி செல்வதற்கு உலக சுகாதார துறை தயாராகவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் மருத்துவ துறையில் பாரிய புரட்சிகரமான மாற்றங்கள் இடம்பெறும். அதற்கு நாம் தயாராகவேண்டும். எதிர்வரும் பத்தாண்டுகளில் தற்போதுள்ள சிகிச்சை முறைகள் மறைந்து புதிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படும். நிதியில்லையென்பதை காரணம் காட்டி நவீன தொழில்நுட்பத்தை தாமதிப்பது நல்லதல்ல. தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் எம்.ஆர்.ஐ இயந்திரம் தனியார் வைத்தியசாலைகளில் கூட இல்லை. இதனால் நோயாளிகள் பெரும் நன்மையடைவார்கள் என அவர் தெரிவித்தார்.

கலுபோவில போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 16 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வெளிநோயாளர் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கலுபோவில போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தன உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2018 14:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க