பலஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் வேலைத்திட்டத்தினூடாக இந்தியா உதவ முன்வந்துள்ளது. இதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்க 20 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. பலஸ்தீனில் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளக்கு முகங்கொடுத்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலஸ்தீன மக்களுக்கு உதவும் திட்டத்திற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலரை சேகரிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பலஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம்
படிக்க 1 நிமிடங்கள்