இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 3போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.தொடர் சம நிலையில் முடிவுற்றுள்ள நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணியின் வெற்றி எல்லோராலும் வெகுவாக பாராட்டப்படுகின்ற வெற்றியானது.பெரும் நெருக்கடிக்கு மத்தியில் தவித்திருந்து போராடி இந்த வெற்றியை இலங்கை பெற்றுள்ளது.கடந்த 23ஆம் திகதி பிரிஜ்டவுனில் ஆரம்பமான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி நாணய சுழற்சியில் வென்று தனது முதலாவது இன்னிங்சில் 204 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.லஹிரு குமார 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 154 ஓட்டங்களை பெற்றது.திக்வெல்ல 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.Npசன் ஹொல்டர் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது 2ஆவது இன்னிங்சில் மேற்கிந்திய அணி 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.144 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்கோடு களம் நுழைந்த இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.