fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2018 10:39

ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு

கம்போடியாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கம்போடியா எல்லைப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கம்போடியாவில் ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கடத்தப்பட்டனர். கம்போடியாவின் எல்லைப் பகுதியில் இடம்பெறும் மோதல் சம்பவங்கள் குறித்தான செய்திகளை வழங்கியமைக்காக அவர்கள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த இருவரின் சடலங்களும் ஈக்குவடோர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 26, 2018 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க