முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகாததன் காரணமாக அவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன பிடியாணை பிறப்பித்துள்ளார்.அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடரப்பட்ட நிலையிலேயே அவர் இன்று முன்னிலையாகததன் காரணத்தால் அவருக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதியமைச்சர் சரணவுக்கு பிடியாணை
படிக்க 0 நிமிடங்கள்