பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தீ வைக்கப்படுவதினால் மண்சரிவு மற்றும் பாறைகள் புரளும் அனர்த்தம் இருப்பதாக இடர்முகாமைத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காடுகளை இவ்வாறு தீ வைக்கும் நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு பரிசில்களை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஈஎம்எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.