நமது முன்னோர்களின் கலாசார உரிமைகளை பாதுகாத்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது அரசாங்கத்தின் கடமையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க உணகல விகாரையின் தாதுகோபுரத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பொலன்னறுவை இங்குறங்கொட உணகல விகாரை உலகெங்கும் வாழும் பௌத்த மக்கள் தரிசிக்கும் வகையில் புனரமைப்பதற்கான பணிகள் 2016 ம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீள் எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இப்புனரமைப்புபணிகள் இடம்பெற்றன. இதன் அடிப்படையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இவ்விகாரையின் தாதுகோபுரத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் இடம்பெற்றது. நினைவுப் படிவத்தை திரைநீக்கம் செய்து. தாதுகோபுரத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மின்னொளியை ஏற்றியை கோபுரத்தை பிரகாசப்படுத்தினார். தொடர்ந்து கோபுரத்திற்கு ஜனாதிபதி மலர் தூவி வணக்கம் செலுத்தினார். இதன் பின்னர் அங்கிருந்த மக்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் சுகாதாரம் விவசாயம், நீர்பாசனம், சமூக நலன்புரி சமயம் ஆகிய துறைகளுக்காக நாங்கள் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளோம். இலங்கையில் வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அபிவிருத்தி திட்டங்களை நான் இங்கு நான் நடைமுறைப்படுத்தவுள்ளேன். ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய திகதி களில் 150 திட்டங்கள் இம்மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். அந்த 3 நாட்களும் மீள் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்டத்திர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நாட்களாக அது அமையும். பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகல் மாவட்டங்களிலுள்ள அனைத்து குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படும். மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தினால் உருவாகும் புதிய வாய்க்கால்கள் உட்பட ஏனைய வாய்க்கால்கள் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்திலும் அதனை அண்டியுள்ள மாவட்டங்களிலும் விவசாய பிரச்சினைகளுக்கும் குடிநீர் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். அபிவிருத்திக்கான பாரிய முயற்சிகளை நாங்கள் வகுத்து அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறோம். அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஊடகங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் இவை எல்லாம் நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே தென்படுகின்றன. கொழும்பிலுள் அரசியல் கிராமத்தில் இல்லை. கிராமங்கள் எப்போதும் அமைதியாகவுள்ளன. கிராமபுறங்களில் காணப்படும் கலாசாரம், ஒழுக்கம், ஐக்கியம் மற்றும் பௌத்த கோட்பாடுகள் காரணமாக நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மகாசங்கத்தினர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.