குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பிரதேச இணைப்புக்குழுக் கூட்டங்களை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாதென அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய அவர்,
வெள்ளப் பாதிப்பை அரசியல் மயப்படுத்தக்கூடாது. கட்சி பேதமின்றி வெள்ளத்தினால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில கூட்டங்களையும் அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. பிராந்திய ஒருங்கிணைப்பு கூட்டங்களையும் அரசியல் மேடை ஆக்கக்கூடாது. பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒருசிலரை தெரிவு செய்து அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது பிராந்திய இணைப்புக்குழு கூட்டங்களின் பணியல்ல. மக்களுக்கு எவ்வாறு சேவை செய்வது அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு சேவையாற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள். மக்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவே இக்கூட்டத்தில் ஆராயப்படவேண்டும் என தெரிவித்தார்.
மாத்தறை முலட்டியன பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வைபம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த வருடத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட முரட்டியன கிராம சேவர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு இந்நிகழ்வில் நட்டயீடு வழங்கப்பட்டது. தேசிய காப்புறுதி நிதியத்தின் ஊடாக 388 பேருக்கு 36 கோடி ரூபா நட்டயீடாக இங்கு வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் அக்மலை பகுதி அமைப்பாளரும் தென் மாகாண சபை உறுப்பினருமான ரஞ்சித் மூணசிங்க உட்பட பலர் இவ்வைபத்தில் கலந்துகொண்டனர்.