வெளிநாட்டு முதலீடுகளை பெற்று வருமான வழிகளை உருவாக்கி, நாட்டை முன்நோக்கி இட்டுச்செல்லப்போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
காலி, வெலிவிட்டிய திவிதுர பிரதேச செயலகத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதற்கென, 400 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கிணைவாக, கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1325 பேருக்கு 712 இலட்சம் ரூபா நட்டஈடும், பிரதமரினால் வழங்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்திற்கு கடன் சுமையை விட்டுவைக்கப்போவதில்லையென, தெரிவித்தார்.
எமக்கு எப்படியேனும் முன்நோக்கி செல்ல முடியும். அபிவிருத்தியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். புதிய சலுகைகளை கொடுத்து வெளிநாட்டு முதலீட்டர்களை அழைத்துவரவுள்ளோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் பொறுப்பேற்றதற்கு என்னதான் அதில் செய்ய முடிந்தது. நல்ல வேளை, சைனா மேர்சன்ட் நிறுவனத்துடன் பேசி, அவர்கள் இதை இந்து சமுத்திரத்தின் பிரதான துறைமுகமாக மாற்றியமைக்கப்போவதாக சொன்னார்கள். இதை அபிவிருத்தி செய்யும் அதேநேரம், எமக்கு ஆயிரம் மில்லியன் டொலர்களை தந்தார்கள். இப்போது நாங்கள் ஆயிரம் மில்லியன் டொலர்களால் கடனை குறைத்திருக்கின்றோம். இதையும் தூற்றுபவர்கள் இருக்கிறர்ர்கள். நாம் நாட்டை விற்க போவதாக கூறுகிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? தேவையில்லாமல் வீதிகளை அமைத்ததற்கு நாம் என்ன செய்ய? மத்தல விமான நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறோம். எவ்வாறு வருமான மார்க்கங்களை உருவாக்க வேண்டுமென்பது தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். அதற்கான வழிகளையே நாம் தேட வேண்டும். திருவாளர் ஹிட்லரின் மூத்த சகோதரர் கூறியிருந்தார், அவர் இன்னும் ஆட்சியில் இருந்திருந்தால், ஹம்பாந்தோட்டை, மத்தல போன்று, மேலும் பல துறைமுகங்கள், விமான நிலையங்களை அமைக்கப்போவதாக, கூறியிருந்தார். இருப்பதை வைத்துக்கொண்டே நாம் மிகுந்த கஷ்டத்துடன் முன்நகர்ந்து வருகிறோம். வேறு என்ன செய்ய? அதை தான் நான் அவரிடம் கேட்க வேண்டியுள்ளது. நாம் அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டல், எதிர்காலம் கிடையாது. எவ்வாறாவது நாம் இதிலிருந்து மீள வேண்டும். கடனை திருப்பி செலுத்தினாலும், எமது ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. வெளிநாட்டு வளங்கள் மற்றும் முதலீடுகளை பெற்றுக்கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கமையவே நாம் 2020-2025 வளமிக்க நாடு எனும் செயற்றிட்டத்தை அறிமுகப்படு;தினோம். தற்போது இவற்றை பூர்த்தி செய்து கொண்டு, அடுத்த 5 வருடங்களில் வருமானத்தை ஈட்டுவதையே நோக்கி செல்ல விருக்கின்றோம்.
அரசாங்க ஊழியர்களின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பிலும், பிரதமர் கருத்து வெளியிட்டார்.
எண்டர்பிரைஸ் லங்கா வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அதனூடாக கீழ்மட்டத்தில் உள்வர்களுக்கு மூலதனத்தை பெற்றுக்கொடுக்கவுள்ளோம். அதேபோன்று எமது கம்பெரலிய திட்டம், வீதிகளை அமைப்பதற்கே இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு தொடர்ச்சியாக வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதனால் பிரதேச செயலகங்கள் முழுமையாக பணியில் இறங்க வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சர்களும் இங்கு உரையாற்றினர்.