நாட்டில் சப்ரகமுவ மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேல், மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://www.itnnews.lk/wp-content/uploads/2018/06/Weather-rain.png)
இன்றைய வானிலை
படிக்க 0 நிமிடங்கள்