fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை : நடிகர் அதர்வா

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 17:36

எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை : நடிகர் அதர்வா

பத்ரி வெங்கடேஷ் இயக்கி நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய படம் ‘செம போத ஆகாதே’.  படக்குழுவினர் அண்மையில் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அதர்வா கூறியதாவது:- “எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை.என நடிகர் அதர்வா பதில் அளித்துள்ளார்.

 இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு மற்றவர்களுக்கு உதவ கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை என மேலும் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 17:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க