Country | Buying | Selling | |
![]() | Dollar | 174.31 | 178.06 |
USA | |||
![]() | Pound | 219.38 | 226.29 |
UK | |||
![]() | Euro | 195.48 | 202.19 |
EU | |||
![]() | Yen | 1.59 | 1.65 |
Japan | |||
![]() | Yuan | 25.11 | 26.28 |
China | |||
![]() | Dollar | 120.42 | 125.45 |
Australia |
இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்
Related Articles
நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார். Untitled 422 தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை முன்னெடுப்பதே நோக்கம் என்றும் கூறினார்.
அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திராதிகள், உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போதும் அறவிடப்படும் ‘வற் வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மில்லெனிய, பண்டாரகம என்ற இடத்தில் உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார். புதிய கைத்தொழில் துறையைச்சார்ந்தோருக்கு வரி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் கொண்டுவரும்போதும் அதற்காக அறவிடப்படும் ‘வற்’ வரியை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி பெற்றுக்கொடுக்க கூடிய நிறுவனமொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். முன்னர் நாம் இவ்வாறான நிதியை DFCC, NDB அரசு பெற்றுகொண்டது. இருப்பினும் கடந்த கால ஆட்சியின் போது அவை தனியார் மயப்படுத்தப்பட்டன. எனவே நாம் இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.