காங்கேசன்துறை மல்லாகத்தில் கடந்த 17ஆம் திகதி இரவு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது பொலிசார் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும், இந்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்தாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மல்லாகம் சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்