fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 16:10

உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப்

உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் வழங்கும் வேலைத்திட்டத்தை யதார்த்த நிலைக்கு மாற்றவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனை கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த யோசனைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய டெப்களை வழங்கும் வேலைத்திட்டத்தை துரித கதியில் ஆரம்பிக்க முடியுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்களை நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கும் விதத்தில் தயார்ப்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். சர்வதேச ரீதியாக திறமைகளை வெளிக்காட்டும் விதத்தில் மாணவர்களை உருவாக்க நவீன தொழில்நுட்பம் அவசியமாகும். டெப் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்விசார்ந்த தகவல்களை திரட்டவும் சந்தர்ப்பம் வழங்கப்படும். டெப் உபகரணத்தில் உள்ளீடு செய்யப்படும் இணையத்தளங்களை மாத்திரமே பார்க்கக்கூடிய விதத்தில் மென்பொருள் பாதுகாப்பு செயற்பாட்டுடன் டெப் உபகரணம் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 16:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க