fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரிய துருவங்களில் தவிக்கும் உறவுகள் இணையுமா ?

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 15:52

கொரிய துருவங்களில் தவிக்கும் உறவுகள் இணையுமா ?

கொரிய மோதல்களினால் பிரிந்துசென்ற குடும்பங்களை மீண்டும் இணைப்பதற்கான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரிந்துசென்ற குடும்பங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related image

கொரிய யுத்த வடுக்கள்

வடகொரியா, தென் கொரியா என்ற இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தெருச்சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. இரண்டாவது உலகப் போரோடு ஆரம்பமான வரலாற்று பெருமை கொண்டது. ஜூன் 25 1950 லிருந்து ஜூன் 27 1957 வரை நீடித்த கொரிய யுத்தமானது இரணடாம் உலகப் போருக்குப் பிறகு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட யுத்தமாகும். கொரிய யுத்தத்தின்மூலம்தான் அமெரிக்காவின் பனிப்போர் உச்சக்கட்டத்தை தொடங்கி வைத்தது. கொரிய யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கா போர் காலத்தில் வடகொரியாவும் சீனாவும் பல மனித உரிமைகளை மீறி செயல்பட்டன என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. என்றாலும் உண்மையில் அமெரிக்காதான் அத்தகைய மனித உரிமைகளை மீறி செயல்பட்டது என தற்போது வெளிப்படத் துவங்கியுள்ளது.

Image result for korea war

 

இரு கொரிய தலைவர்களும்  சந்திப்பு

இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் இருவரும் இருநாட்டு எல்லையில் இருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இராணுவமயமாக்கப்பட்ட வலயத்தில் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பில் அண்மையில் ஈடுபட்டிருந்தார் . பல தசாப்த கால மோதலுக்கு பின்னர் அமைதியை ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

Related image

கிம் மற்றும் டிரம்ப் வரலாற்று முக்கிய சந்திப்பு

அத்துடன் அண்மையில் கிம் மற்றும் டிரம்ப் சந்திப்பு மிகவும் வரலாற்று முக்கியமான சந்திப்பாகும் தற்போதையகிம் மற்றும் டிரம்ப் இடையிலான சந்திப்பு நடந்த இடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் பின்னர் கொரிய தீபகட்பத்தில் மிகவும் வரவேற்கத்தக்க அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது மிக முக்கியமான விடயமாகும்.  இந்நிலையிலேயே கொரிய மோதல்களினால் பிரிந்துசென்ற குடும்பங்களை மீண்டும் இணைப்பதற்கான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

Related image


 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 15:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo