fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2020ம் ஆண்டிற்குள் 25 ஆயிரம் அடுக்கு மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 14:55

2020ம் ஆண்டிற்குள் 25 ஆயிரம் அடுக்கு மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானம்

2020ம் ஆண்டளவில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நகர்ப்புர பகுதிகளில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை இலக்கு வைத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய இவ்வருட இறுதியில் 7 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கான நிர்மாண பணிகளை நிறைவுசெய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அடுத்த வருட இறுதியில் 20 ஆயிரம் குடியிருப்புத்தொகுதிகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் அடுக்குமாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்கவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க