fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேசியாவில் மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 12:09

இந்தோனேசியாவில் மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மதகுருவுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். சம்பவத்தில் 4 பொதுமக்கள் உட்பட தாக்குதலை மேற்கொண்ட 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். தாக்குதலின் பின்னணியில் குறித்த மதகுரு செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த மதகுரு கடந்த 2010 ம் ஆண்டு முதல் சிறைவைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்துகொண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து மதகுருமீதான வழக்கை விசாரணைக்குட்படுத்திய ஜகார்த்த நீதிமன்றம், சந்தேக நபர் மீதான குற்றத்தை உறுதிப்படுத்தியதுடன் குற்றவாளிக்கு மரண தண்டனையும் வழங்கியதாக இந்தோனேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2018 12:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo