fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தினேஸ் சந்திமாலின் மேன்முறையீடு நாளை விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 16:59

தினேஸ் சந்திமாலின் மேன்முறையீடு நாளை விசாரணை

இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் தினேஸ் சந்திமல் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இரு மறைப்புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இல்லையெனில் இரண்டு 20 – 20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படுவதாக ஐசீசீ அறிவித்தது. இதனையடுத்து குறித்த தடையுத்தரவுக்கு எதிராக தினேஸ் சந்திமால் மேன்முறையீடு செய்துள்ளார். மேன்முறையீடு தொடர்பான விசாரணை நாளை ஐசீசீ யின் ஒழுங்கு விதி ஆணைக்குழு தலைவரின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 16:59

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க