fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மகளுக்கு பெயர்சூட்டுவதற்கான வரத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்த பிரதமர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 16:40

மகளுக்கு பெயர்சூட்டுவதற்கான வரத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்த பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டென் தனது மகளுக்கு பெயர் சூட்டுவதற்கான சந்தர்ப்பத்தை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். பதவியில் உள்ள போது குழந்தையொன்றை பிரசவித்த உலகின் இரண்டாவது பெண்மணியாக இவர் வரலாற்றில் இடம் பிடிக்கின்றார். நேற்று அதிகாலை ஒக்லண்ட் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் இவர் குழந்தையை பிரசவித்துள்ளார். 37 வயதுடைய நியூசிலாந்து பிரதமர் ஆறு வாரங்கள் பிரசவ விடுமுறை பெற்று கொண்டதுடன், துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸூக்கு அவரது பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. விடுமுறையின் போதும் அமைச்சரவை பத்திரங்களை ஆராய்ந்து தமது பணிகளில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்துள்ளார். 1856களுக்கு பின்னர் பிரதமர் பதவிற்கு என நியூசிலாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளவயது பிரதமராகவும் ஜெஸின்டா காணப்படுகின்றார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2018 16:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க