சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுமென டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. குறித்த உத்தரவுக்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக பொலிஸாரால் ஆயிரத்து 940 பேர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். அவர்களோடு வருகைதந்த ஆயிரத்து 995 சிறுவர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறுவர் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் இச்செயற்பாடு மனிதநேயமற்றதென உலகளாவிய ரீதியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை டைம் பத்திரிக்கை தனது அட்டைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.