ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்தை நீடிக்க முடியாதெனவும், அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள தமது தரப்பினர் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, 3 நாள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்தும் 10 தினங்களுக்கு அதனை நீடிக்குமாறு அரச தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் தலிபான்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அரச தரப்பு 10 தினங்களுக்கு போர் நிறுத்தத்தை தொடருமெனவும், குறித்த சந்தர்ப்பத்தில் தமது பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் எதிர் தாக்குதல் நடத்தப்படுமெனவும், ஜனாதிபதி அஷ்ரப் கானி அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்தை நீடிக்க முடியாது : தலிபான் அறிவிப்பு
படிக்க 1 நிமிடங்கள்