SL VS WI 2nd TEST : 287 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை
Related Articles
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் இரண்டாவது இனிங்சில துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுள்ளது. குசல் மென்டிஸ் 87 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். முதல் இனிங்சில் இலங்கை அணி 253 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகள் 300 ஓட்டங்களையும் பெற்றுள்ளன. அதற்கமைய போட்டியில் இரு விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 287 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை பெற்று ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது