மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கந்தானை பேரலந்த ரயில் கடவைக்கு அருகில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. ரயில் கடவையின் கேட் மூடப்பட்டு சமிக்ஞை விளக்குகள் எரியவிடப்பட்டிருந்த போதும் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் வேகமாக பயணித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் களனி கோணவல பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்