பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. தரமற்ற புத்தக பைகள் காரணமாக மாணவர்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தரமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி புத்தக பைகளை இலகுபடுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு தவணைக்கென பல கட்டங்களாக பாடபுத்தகங்களை அச்சிட்டு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இதற்கென குழுவொன்றை நியமித்து அதனூடாக தீர்மானமொன்றை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எச்.எம்.அபேரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கென பராமரிப்பு மத்திய நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளை பராமரித்துக்கொள்தே இதன் நோக்கமாகும். பராமரிப்பு மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது குறித்து அவதானம்
படிக்க 1 நிமிடங்கள்