fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 18:36

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படுமென நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நல்லாட்சி அரசாங்கத்தின்மற்றொரு திட்டமாக இதனை அமுல்படுத்துவதாக மாத்றையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்கும் வைபவம் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். மாத்தறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் 420 பேருக்கு தேசிய பாதுகாப்பு நிதியத்தில் இருந்து நஸ்டயீடு வழங்கப்பட்டது. சுமார் 150 கோடி ரூபா இவ்வாறு நஸ்டயீடாக வழங்கப்பட்டது. சுனாமியினால் வீடுகளை இழந்த 44 பேருக்கு கொடுப்பனவு பத்திரங்களும் இங்கு வழங்கப்பட்டன. நஷ்டயீடு வழங்கும் போது கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் கட்சி பேதத்தின் அடிப்படையில் வழங்கியதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் நஷ்டயீட்டை வழங்குவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 18:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க