fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 12:45

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம்

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிராமப்புர பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறைந்தவருமானம் பெறும் கிராமப்புர மக்களை இலக்காக கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பின்தங்கிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை கட்டியெழுப்புவதற்கு கம்பெரலிய வேலைத்திட்டம் கைகொடுக்குமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் இரு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள இத்திட்டத்திற்கென பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ஓனேகம மெதமலுவ விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறுவர்களுக்கென சிறந்த நாட்டை கட்டியெழுப்புவது அனைவரதும் பொதுவான கடமையாகும். இதற்கென மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2018 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க