கேரள கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் வெலிசர பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்திய பிரஜையென தெரியவந்துள்ளது. ஏனைய இருவர் பேசாலை பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபவென மதிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுடன் மூவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்