நாட்டின் பல பாகங்களில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுA