இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். ஹிஜ்ரி – 1439 ஷவ்வால் மாத்திற்கான தலைபிறை தென்பட்டதையடுத்து இன்றைய தினம் இலங்கைவாழ் முஸ்லிம்கள் ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர். கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அறிவிப்பையடுத்து பெருநாள் கொண்டாட்டங்கள் இன்று இடம்பெறுகின்றன. முஸ்லிம்கள் தமது உறவினர்களுடன் இணைந்து உணவுகளை பகிர்ந்து ரமழான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதேவேளை ஈகை திருநாளான நோன்பு பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் சகல இஸ்லாமிய சகோதரர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.

இன்று புனித ரமழான் நோன்புப் பெருநாள்
படிக்க 0 நிமிடங்கள்