ரஷ்யாவுக்கு விஜயம் செய்யுமாறு வடகொரிய தவைர் கிம் ஜோன் உன்னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய அதிகாரியான கிம் யோங் நம்முடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே புட்டின் இவ்வழைப்பை விடுத்தார். இச்சந்திப்பின்போது வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன் வழங்கிய எழுத்துமூல குறிப்பொன்றை, வடகொரிய பிரதிநிதி ரஷ்ய ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அதன் பின்னரே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யுமாறு கிம் ஜோன் உன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உலகில் மூன்றாம் உலக மகா யுத்தமொன்று ஏற்படும் அளவுக்கு மோதிக்கொண்டிருந்த ட்ரம்ப் மற்றும் கிம்முக்கிடையிலான சிங்கப்பூர் அமைதி பேச்சுவார்த்தையின் பின்னர் புட்டின் இவ்வழைப்பை விடுத்துள்ளார். மேலும் நடைபெற்ற குறித்த பேச்சுவார்த்தையை விளாடிமிர் புட்டின் வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.