fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதல் போட்டியிலேயே அபார வெற்றியை பதிவு செய்த ரஷ்யா

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2018 13:55

முதல் போட்டியிலேயே அபார வெற்றியை பதிவு செய்த ரஷ்யா

21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் மேலும் மூன்று போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. முதல் போட்டி மாலை 05.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் குழு யு இல் அங்கம் வகிக்கும் எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதவுள்ளன. இரண்டாவது போட்டி இரவு 08.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் குழு டீ இல் அங்கம் வகிக்கும் மொரோக்கோ மற்றும் ஈரான் அணிகள் மோதவுள்ளன. மூன்றாவது போட்டி இரவு 11.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் குழு டீ இல் அங்கம் வகிக்கும் போர்த்துக்கள் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. கால்ப்பந்தாட்ட போட்டிகள் நேற்று ரஷ்யாவில் ஆரம்பமான நிலையில் முதல் போட்டியில் ரஷ்யா, சவூதி அரேபியாவை எதிர்கொண்டது. இதில் அபாரமாக விளையாடிய ரஷ்யா 5 – 0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தியது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2018 13:55

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க