fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2018 13:33

போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மீண்டும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக சில பிரதேசங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய – வேகந்தவெல பிரதேசத்தில் முன்னெடுத்துச்செல்லப்பட்ட போலி நாணயத்தாள் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ஐந்தாயிரம் ஆயிரம் மற்றும் 100 ரூபாய் போலி நாணயத்தாள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கென பயன்படுத்தப்பட்ட மடிகணனி மற்றும் அச்சு இயந்திரமொன்றும் பொலிஸாரின் வசம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த அச்சகத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, மேலுமொரு சந்தேக நபர் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2018 13:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க