தென்னாபிரிக்க மசூதியொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மால்மேஸ்பரி நகரிலுள்ள மசூதியொன்றில் தொழுகை நேரத்தில் கையில் கத்தியுடன் வருகைத்தந்த நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கத்திக்குத்து மேற்கொண்ட நபரை சரணடையுமாறு அறிவித்தனர். சந்தேக நபர் அதற்கு செவிசாய்க்காமையினால், பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றனர். தாக்குதலுக்கு இலக்கான மேலும் பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்க மசூதியொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பத்தில் இருவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்