ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை விடுதியொன்றில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கழிவறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் 14 வயதான கோண்டாவில் பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை விடுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை
படிக்க 0 நிமிடங்கள்