நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ இடியுடன் கூடிய மழையோ
பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். வடமத்திய மாகாணத்திலும், புத்தளம், மாத்தளை, மொனராகல, ஹம்பாந்தோட்ட மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.