சுகாதார சேவையில் வெட் வரியை நீக்க ஆலோசனை
Related Articles
சுகாதார சேவையில் வெட் வரியை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதார சபையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆலோசனை கட்டணம், பரிசோதனை கட்டணம், வைத்தியசாலை கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரியை நீக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை, மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்துவ சிகிச்சைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நோளாயரின் நோய்நிலைக்கான கட்டணத்தை அவர் அறிந்துகொள்ளமுடியும். மேலும் நோயாளியொருவரை, வைத்தியர் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பரிசோதிக்க வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்களுக்கு உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுப்பதே வேலைத்திட்டத்தின் நோக்கமாகுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.