fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 14:08

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி

பலஸ்தீன் காசா வன்முறை தொடர்பில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. காசா பகுதியில் அப்பாவி பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 129 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். கடந்த மே மாதம் 61 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்கு ஹமாஸ் போராளிகளே காரணமென இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணையை முன்வைத்தது. குறித்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அமெரிக்காவுக்கு ஆதரவாக 8 நாடுகள் மாத்திரமே வாக்களித்தன. 120 நாடுகள் எதிராக வாக்களித்தன. இதனால் அமெரிக்காவின் பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் படுதோல்வியடைந்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க