79வது உதா கம்மான மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்களிடம் கையளிப்பு
Related Articles
79வது உதா கம்மான மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சிரிபோபுர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்தில் 71 வீடுகள் உள்ளடங்குகின்றன. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக குறைந்த வட்டியுடனான கடன் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலா 10 பேர்ச் காணியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கிராமத்தின் நிர்மாண பணிகளுக்கென 435 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.