21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் தற்போது ரஷ்யாவின் பக்கம் கவனம் செலுத்திவரும் நிலையில், இக்கிண்ணத்திற்காக 32 அணிகள் மோதவுள்ளன. நாளைய முதலாவது போட்டியில் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதி வரை உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. 64 போட்டிகள் மொத்தமாக 11 நகரங்களில், 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன. ரஷ்யாவின் சில நகரங்கள் ஐரோப்பா கண்டத்துக்கும், சில நகரங்கள் ஆசிய கண்டத்திலும் அமைந்துள்ள நிலையில், வரலாற்றில் ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடைபெறும் முதலாவது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டி இதுவாக அமைந்துள்ளது.
இதேவேளை இம்முறை மைதானத்தில் ஏற்படும் தவறுகளை கண்காணிப்பதற்கென வீ.ஏ.ஆர்.எனப்படும் கானொளி உதவி நடுவர்கள் முறையொன்று அமுல்ப்படுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து அமர்ந்து நடுவர்கள் குறித்த காணொளியை நேர்த்தியாக அவதானித்து ஒவ்வொரு நொடிகளிலும் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டவுள்ளனர். இது கல நடுவருக்கு அறிவிக்கப்பட்டு, உடனடியாக அந்த பிழைகள் சுட்டிக்காட்டப்படவுள்ளமை இம்முறை கால்ப்பந்தாட்ட போட்டியின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.