கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கும், நகர மண்டபத்திற்கும் செல்லும் மக்களின் நலன்கருதி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடற்படையினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.