கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழா இன்று
Related Articles
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவணி இன்று மாலை இடம்பெறவுள்ளது. கடந்த 3ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழாவில், கடந்த திங்கட்கிழமை வரை தினமும் மாலை நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று, நேற்றைய தினம் வெஸ்பஸ் ஆராதனை இடம்பெற்றது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் திருவிழா திருப்பலியுடன் திருசொரூப பவணி இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோயல் இமானுவேல் ஆண்டகை தமிழில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளதோடு, சிங்கள மொழியில் கொழும்பு துணை ஆயர் பேரருட்திரு மெக்ஸ்வல் சில்வா திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார். ஆங்கில மொழியில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேரருட்திரு பியார்வான்டொட் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் இடம்பெறவுள்ளது. மாலை 05.00 மணிக்கு திருச்சொரூப பவணி ஆரம்பமாகவுள்ளது. பின்னர் இரவு 08.00 மணிக்கு இறுதி ஆசீர்வாதம் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.