புத்தளம் மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி தலைமையில் தீர்வு
Related Articles
வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் கிராமசக்தி செயற்திட்டம் இன்று புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. கிராமசக்தி கிராமத்தை கட்டியெழுப்பும் பயணம் செயற்திட்டத்தினூடாக கிராம மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைக்கு குறித்த தீர்வை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். அதற்கமையவே இதன் முதலாவது வேலைத்திட்டம் புத்தளம் மஹாவௌ மெதகொட பகுதியில் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 16 பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் அபிவிருத்தி தொடர்பான தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கான வாய்ப்புக்கள் இதனூடாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.